இரசாயனப் பிணைப்புகள் - Chemical bond

பங்கீட்டு வலுப்பிணைப்பு
ஒரு அணுவினது சோடியற்ற இலத்திரன்கள் இன்னொரு அணுவினது சோடியற்ற இலத்திரன்களுடன் பங்கிடப்பட்டு சோடியாகும் செயற்பாடே பங்கீட்டுவலுப் பிணைப்பு எனப்படுகின்றது. எனவே ஒரு அணுவில் உள்ள சோடியற்ற இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனான பங்கீட்டுப் பிணைப்புக்களை அவ்வாறு தோற்றுவிக்கும்.
சோடியற்ற இலத்திரன்களைக் கொண்ட அணு ஒபிற்றல்கள் மேற்பொருந்தும் வகையின் அடிப்படையில் இருவிதமான பங்கீட்டுவலுப் பிணைப்புக்கள் தோன்றுகிறது.
1. Sigma(σ) பிணைப்பு
    அணுவினது Orbital கள் நேர்கோட்டில் மேற்பொருந்துவதனால் Sigma 
    பிணைப்புத் தோன்றுகின்றது.
    இது தோன்றுவதற்கு பின்வரும் மூன்று அடிப்படைச் சந்தர்ப்பங்கள் உண்டு.
2. Pi(π) பிணைப்பு
    அணுவினது Orbital கள் பக்கவாட்டில் மேற்பொருந்துவதனால் Pi
    பிணைப்பு தோன்றுகின்றது.இது  P Orbital களுக்கிடையே மாத்திரம்
    தோன்றுகின்றது.இங்கு அதிகபிரதேசத்தில் இலத்திரன் பரம்பி இருப்பதால்
    இலத்திரன்  அடர்த்தி குறைவாகும். எனவே σ பிணைப்பை விட π  பிணைப்பு
    வலிமை குறைந்தது.




இரசாயனப் பிணைப்பின் வகைகள்
இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றதன் அடிப்படையில் பிணைப்புக்கள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படும்.
1. பங்கீட்டு வலுப்பிணைப்பு
2. ஈதற் பிணைப்பு
3. அயன் பிணைப்பு
4. உலோகப் பிணைப்பு

இரசாயனப் பிணைப்புக்களில் இலத்திரன்கள் சம்பந்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள்
1.மூலக அணுவின் ஈற்றோட்டு இலத்திரன் எண்ணிக்கைக்கும் ஆனால் 
   உருவாகும் பிணைப்புக்களின் எண்ணிக்கைக்குமிடையே தொடர்பு 
   காணப்படுகின்றது.
2. நீர்க்கரைசல்களை மின்பகுக்கும் போது புதிய விளைவுகள் தோன்றுகிறது. 
   இங்கு பிணைப்புக்கள் உடைதலும் உருவாதலும் நடைபெறுகிறது.
3. மின்கலங்களின் இயக்கத்தின் போது மின் உருவாக்கப்படுகின்றது. இதன் 


   போது பிணைப்புக்கள் உடைதலும்ää உருவாதலும் நடைபெறுகிறது.
இரசாயனப் பிணைப்புக்கள் உருவாதல்
மூலகங்கள் உறுதிநிலை அடைவதற்காக பிணைப்புக்களை உருவாக்கு கின்றன.
இரசாயனப் பிணைப்புக்கள் தோற்றுவிக்கப்படும்போது சக்தி வெளியேறு வதனால் உருவாகும் கூறுகள் உறுதியடைகிறது.
பிணைப்புக்களைத் தோற்றுவிப்பதில் இலத்திரன் ஏற்றலோ அல்லது இழத்தலோ அல்லது பங்கீடு செய்தலோ நடைபெறுவதன் மூலம் தனது ஈற்றமைப்பை இயன்றவரை பூர்த்தி செய்கிறது இது எண்மவிதி அல்லது சடத்துவ விதி எனப்படும்.
ஆனால் இவ்விதிக்கு உட்படாத மூலக்கூறுகள் காணப்படுகின்றது.

வந்தர்வாலின் கவர்ச்சி(Vander Val bond)
முனைவாக்கம் அற்ற மூலக்கூறுகள் கொண்ட பதார்த்தங்களிலும் அயல் மூலக்கூறுகளுக்கிடையில் மிக நலிவான கவர்ச்சி விசை காணப்படும். இதுவே வந்தர்வாலின் கவர்ச்சி விசை என அழைக்கப்படும்.

இக்கவர்ச்சி விசை ஏற்படுவதற்கான காரணம்
மூலக்கூறு ஒன்றின் நேரேற்ற மையம் நிலையாக இருக்க மறை ஏற்றத் துணிக்கைகள் இயக்க நிலையில் இருப்பது ஆகும். இதனால் ஒரு தற்காலிக முனைவாக்கம் ஏற்படுகிறது. அதாவது முனைவாக்கம் அற்றவை என கருதப்படும். மூலக்கூறிலும் ஒரு தற்காலிக முனைவாக்கம் ஏற்படுகிறது. இதன் விளைவாக அயல் மூலக்கூறுகளுக்கிடையில் ஏற்படும். கவர்ச்சி வந்தர்வாலின் பிணைப்பாகும்.
Eg :- H2, Cl2, BCl3, CH4, CCl4, CO2  போன்ற முனைவாக்கமற்ற பதார்த்தங்களில் அயல் மூலக்கூறுகளுக்கிடையில் இருப்பது வந்தர்வாலின் கவர்ச்சி விசை யினால் ஏற்படும் பிணைப்பாகும்.

மூலக்கூற்றுப்பருமன் அதிகரிக்க வந்தர்வாலின் கவர்ச்சி அதிகரிக்கும்.